மினரல் வாட்டர் குளியல், பசும் பால் குளியல் என தங்களின் அழகை மெருகூட்ட நடிகைகள் செய்யும் காஸ்ட்லீ விஷயங்கள் குறித்து நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால் முற்றிலும் வித்யாசமாக பீரில் குளித்து பரபரப்பை கிளப்பி இருக்கிறார் தென்னிந்திய நடிகை ஒருவர்.
ஸ்ரவ்யா ரெட்டி எனும் குறிப்பிட்ட தெலுங்கு சின்னத்திரை நடிகை, சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். சமூக வலைத்தளங்களில் பிரபலமாகும் நோக்கத்தோடு, அளப்பறையான வீடியோக்களை வெளியிட்டு வரும் இவரின் சமீபத்திய முயற்சியே இந்த பீர் குளியல்.
முன்னதாக பாத் டப்பில் பனிக்கட்டியில் குளியல் போட்டு பரபரப்பை கிளப்பி இருந்தவர், தற்பொழுது 30 கூலிங் பியரில் குளித்து வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.
இதனை தனது யூட்யூப் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் நிலையில், கவர்ச்சி பிரியர்கள் புகழ்ந்து தள்ள, ஒரு சிலரோ 'பிரபலத்துக்காக என்னவேண்டுமானாலும் செய்வீர்களா?' என எதிர்மறை விமர்சனங்களால் கழுவி ஊற்றி வருகின்றனர்.
Social Plugin