#Viswasam #50thDay #ThalaAjith
சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் திரைப்படம் நேற்று தனது 50வது நாளில் அடியெடுத்து வைத்தது. இதனையொட்டி 13 வருடங்களாக தமிழ் சினிமாவில் நிகழ்ந்திராத அற்புத நிகழ்வையும் நிகழ்த்தியுள்ளது அத்திரைப்படம்.
தொலைக்காட்சி, இணையம் என பொழுதுபோக்கிற்கு பல்வேறு வழிகள் மக்களுக்கு கிடைத்துவிட்ட நிலையில், திரையரங்கு சென்று படம் பார்ப்பவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
இதன் காரணமாக திரைப்படங்கள், திரையரங்குகளில் ஒரு வார காலம் தாக்குப்பிடிப்பதே அறிய நிகழ்வாகிவிட்டது. இத்தகைய சூழ்நிலைகளுக்கிடையேயும், நடிகர் அஜித்தின் 'விஸ்வாசம்' திரைப்படம் தனது 50வது நாளில், தமிழகமெங்கும் சுமார் 124 தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.
முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் சந்திரமுகி திரைப்படம், 50வது நாளில் 134 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அதற்கு அடுத்ததாக 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் விஸ்வாசம் திரைப்படமே இத்தகைய சாதனையை செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
Social Plugin