நயன்தாரா ராதாரவி விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் வைரலாகி வருகிறது அது சம்பந்தமான போஸ்டர் ஒன்று.
சமூகம் மற்றும் அரசியல் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆதரவோ கண்டனங்களோ பெரும்பாலும் சுவரொட்டிகள் மூலம் மக்களுக்கு காட்டப்படுவதை பார்த்திருப்போம்.
மிஞ்சி மிஞ்சி போனால், மதுரையை சேர்ந்த விஜய் அஜித் வெறியர்கள் இது போன்று அரசியல்வாதிகளுக்கு கண்டன போஸ்டர்கள் ஓட்டுவதை கூட பார்த்திருக்க முடியும்.
இப்படியிருக்க, நயன்தாராவை தாக்கி பேசிய ராதாரவி அவர்களுக்கு கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருகின்றனர் ரசிகர்கள் சிலர். குறிப்பிட்ட போஸ்டரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதுக்கெல்லாமாடா போஸ்டர் ஓட்டுவீங்க என கிண்டல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
Social Plugin