பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமடைந்த பிறகு, ஓவியா கதாநாயகியாக நடித்து முதன் முதலாக வெளியாகி இருக்கும் திரைப்படம் 90ml. அடல்ட் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்திற்கு இளசுகளிடமிருந்து வரவேற்பு குவிந்து வந்தாலும், சமூக ஆர்வலர்கள் நடுத்தர வயது ரசிகர்களின் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
இப்படி இருக்க, இத்திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்த நடிகர் சிம்புவும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இத்திரைப்படம் துவங்குவதற்கு முன்னரே ஓவியா, சிம்பு இடையிலான நட்பு; காதல், திருமணம் என அடுக்கடுக்கான கிசுகிசுக்களில் சிக்கி இருந்தது.
அந்த சர்ச்சைகள் சில காலம் மறைந்து போய் இருக்கும் நிலையில், ஒருவேளை வெளிவந்த வதந்திகள் உண்மையாக இருந்திருக்குமோ என ரசிகர்கள் சந்தேகப்படும் அளவிற்கு அமைந்திருந்தது 90ml ல் ஓவியா, சிம்பு இடையிலான முத்தக்காட்சி.
இத்திரைப்படத்தில் நடித்திருந்தது, 'நடிகைகளை தொட்டு கூட பேசாத TR இல்லை, அதே நடிகைகளின் உதட்டை கடித்து இழுக்கும் STR' எனும் பட்சத்தில் இந்த காட்சி சாதாரணம் என்றாலும், STR இடம் கடிவாங்கிய லிஸ்டில் ஓவியாவும் இணைந்திருப்பது ஓவியா ஆர்மியினரிடம் சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது.
Social Plugin