உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் திருமணம் சென்ற மாதம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
பெரிய பெரிய திரைபிரபலங்கள், முன்னனி நிறுவனங்களின் தலைவர்கள் என நட்சத்திர பட்டாளமே திரண்டு வந்த இந்த திருமணத்தை ஒட்டுமொத்த இந்தியாவே வியந்து பார்த்து.
இதுவே வியப்பு என்றால் தனது மருமகளுக்கு அம்பானியின் மனைவி அளித்திருக்கும் பரிசு மேலும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சமீபத்தில் வெளிவந்துள்ள தகவலின் படி, தனது செல்ல மருமகள் ஸ்லோகா மேஹ்டாவிற்கு உலகிலேயே விலை உயர்ந்த வைர நெக்லஸ் ஒன்றினை நிதா அம்பானி பரிசளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
'L’Incomparable' எனும் வகையை சேர்ந்த இதனை லெபனீஸ் நகை வடிவமைப்பாளர் உருவாக்கி இருக்கிறார். இந்த வைர நெக்லஸின் விலை சுமார் 300 கோடி எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பானது அந்த அணிகலனை உலகிலேயே அதிக மதிப்புடைய ஒன்றாகவும் அடையாளம் காண செய்துள்ளது.
Social Plugin