Ad Code

Responsive Advertisement

"பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தற்கொலை" பரபரப்பை கிளப்பிய ஊடகம்




ஊடங்களில் முறையாக விசாரிக்காத செய்திகள் வெளிவரும் போது, ஒரு பிரளயமே வெடித்து விடுகிறது. பெரும்பாலும் சமூக வலைத்தங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து வெளிவரும் இவ்வகை செய்தியால், பாதிக்கப்பட்டு இருக்கிறார் 'இருட்டு அறையில் முரட்டுக்குத்து' யாஷிகா ஆனந்த்.  
சமீபத்தில், இணையவாசி ஒருவர் ஒரு பிரபல பெங்காலி நாளிதழில் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டு, அவர் தற்கொலை செய்துகொண்டார் என செய்தி வெளியிட்டுள்ள பதிவை பகிர்ந்திருந்தார். அதை பார்த்த யாஷிகா ஆனந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

 ஆனால் நடந்தது என்னவென்றால், சி நாட்கள் முன்பு சின்னத்திரை நடிகை யாஷிகா என்பவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார். செய்தியில் யாஷிகாவின் புகைப்படத்துக்கு பதில் பிக்பாஸ் யாஷிகாவின் புகைப்படத்தை போட்டுவிட்டதே இந்த பரபரப்பிற்கு காரணமாக அமைந்துவிட்டது.