Ad Code

Responsive Advertisement

'விஸ்வாசம் மெகா ஹிட்..!' சந்தேகம்னா ஆஃபிஸ் பக்கம் வாங்க..! தயாரிப்பு நிறுவனம் அதிரடி


சிவா இயக்கத்தில், தல அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படம் விமர்சன மற்றும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனை தயாரிப்பு நிறுவனமே ஒப்புக்கொண்டாலும், ஒரு தரப்பினர் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

தமிழக சினிமாவின் மாபெரும் வெற்றி திரைப்படங்களுள் விஸ்வாசமும் ஒன்று என்பதனை, அஜித்திற்கு எதிரான தரப்பினரால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.


இதனால் பல புரளிகள் கிளம்பி வந்த நிலையில், இவற்றிற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஸ்வாசம் வெற்றி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான KJR ஸ்டூடியோஸ்.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில்,'விஸ்வாசம் ஒரு மாபெரும் வெற்றிப்படம், என்பதனை சந்தேகங்களை தகர்த்தெறிந்து நிரூபித்து விட்டது. இந்த படத்தின் விநியோகஸ்தராக, இப்படத்தின் வெற்றியை பெருமையுடனும், தைரியமாகவும் அறிவிக்கிறோம்.

இனியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், அவற்றை போக்க எங்கள் அலுவலக வாசல் திறந்தே இருக்கும். தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அனைவருக்கும் லாபம் அளித்திருக்கும் விஸ்வாசத்தின் வெற்றியில் ரசிகர்களின் பங்கு அளப்பரியது.' என்று குறிப்பிட்டிருந்தது.