Ad Code

Responsive Advertisement

இங்கேயும் சாதனையா..? அதிர்ந்த அமேசான்..! பட்டைய கிளப்பும் விஸ்வாசம் திரைப்படம்


அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். சிவா அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகி இருந்த இத்திரைப்படம் தமிழ் சினிமாவில் குறிப்பிடும்படி வசூல் சாதனை புரிந்தது.

இப்படி திரையரங்குகளில் சாதனை படைத்த விஸ்வாசம், ஆன்லைன் பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும் சாதனை படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆன்லைன் பொழுதுபோக்கு தளமான அமேசானின் ப்ரைம் வீடியோ நிறுவனம், விஸ்வாசம் திரைப்படத்தின் ஆன்லைன் ஒளிபரப்பு உரிமையை சுமார் 11 கோடிக்கு வாங்கி இருந்தது.

இந்நிலையில், இப்படத்தினை கடந்த 26ம் தேதி தங்களது வலைத்தளத்தில் வெளியிட்டது அந்நிறுவனம். அதனை தொடர்ந்து ஒரே நாளில் அமேசான் தளத்தில் அத்திரைப்படத்தை பார்த்தவர்கள் மட்டும், வழக்கமான வாடிக்கையாளர்களை விட பல மடங்கு அதிகம், எனும் சாதனை நிகழ்வு குறித்த தகவலும் திரைத்துறை வட்டாரங்களில் பரவி வருகிறது.

விவேகம் படத்திற்கு, ஹிந்தி ரசிகர்களிடையே கிடைத்திருந்த வரவேற்பு, நடிகர் அஜித்திற்கான ரசிகர் பட்டாளத்தை வடமாநிலங்களில் உயர்த்தி இருந்தது. இதனால் விஸ்வாசம் படத்திற்கும் எதிர்பார்ப்பு எழவே, தாறுமாறாக உயர்ந்திருக்கிறது பார்வையாளர்களின் எண்ணிக்கை.