Ad Code

Responsive Advertisement

அஜித் ரசிகர்களிடம் அடிபணிந்த 'அமேசான்' - விஸ்வாசம் ரிலீஸ் தேதியில் மாற்றம்..?


சிவா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'விஸ்வாசம்'. இன்றும் பல திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் திரைப்பட தளமான அமேசான் வருகிற 25ம் தேதி விஸ்வாசத்தினை  ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவித்தது.

இதனால் வருகிற பிப்ரவரி 28ம் தேதி கொண்டாடப்பட இருக்கும், இத்திரைப்படத்தின் 50வது நாளுக்கு பிரச்சனைகள் வரலாம் என எண்ணிய அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பை காட்டினர்.

'இன்றும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் இத்திரைப்படத்தினை வெளியிடக்கூடாது' எனவும் அந்நிறுவனத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோள், அமேசான் நிறுவனத்தின் காதில் விழுந்ததோ என்னமோ தெரியவில்லை, ஆனால் விஸ்வாசம் தயாரிப்பு நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்தது.

இதனால், படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களின், இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் விதத்தில், படத்தின் ஆன்லைன் ரிலீஸை தள்ளிவைக்க கோரி அமேசான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

இதன் விளைவாக, 25ம் தேதி விஸ்வாசம் ரிலீஸ் என்று கூறி வந்த அந்நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு ரிலீஸ் தேதியில் மாற்றம் வரலாம் என பதிலளித்து வருகிறது.