Ad Code

Responsive Advertisement

'ரஜினியும் -கமலும்' சேர்ந்தால் அரசியலில் தெறிக்க விடலாம்..! நடிகர் விஷாலின் புதிய ஆசை


சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல் என தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்கள் அரசியல் களம் கண்டுவிட்டனர். நடிகர் கமலா, அரசியலில் கோடு போட்டு ரோடே போட்டு விட்ட நிலையில், 'நாடாளுமன்ற தேர்தல் வரை, கோடும் கிடையாது ரோடும் கிடையாது' என அரசியல் புள்ளி மட்டும் வைத்துவிட்டு காத்திருக்கிறார்.

இருந்தாலும் அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வரும் அவர், 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்த கமலுக்கு தனது வாழ்த்துக்களையும் சமீபத்தில் தெரிவித்தார்.

அதன் பின்னர் பல்வேறு தரப்பினரும், கமலுக்கு வருகிற லோக்சபா தேர்தலில் ஆதரவு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தனர். இந்நிலையில், நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷாலும் அதே கோரிக்கையை தனது ட்விட்டர் பதிவின் மூலம் முன்வைத்து இருக்கிறார்.

இது குறித்த அந்த பதிவில், நடிகர் ரஜினியும் கமலும் இணைய வேண்டும். நடிகர் சங்க நிகழ்வுக்கோ, பிரபலங்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கோ அல்லது திரைப்படத்திற்கோ இல்லை. 2019 லோக்சபா தேர்தலுக்கு. அப்படி அவர்கள் இணைந்தால், அரசியலில் மிகப்பெரும் மாற்றங்கள் வரும்' என தெரிவித்து இருந்தார்.
விஷாலின் இந்த பதிவுக்கு ஒருபுறம் ஆதரவு கிடைத்தாலும், எதிர்மறை விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன.