உடல் நல குறைவு காரணமாக அமேரிக்கா சென்ற கேப்டன் விஜயகாந்த் அண்மையில் தமிழகம் திரும்பி இருந்தார். அவரது வருகையையொட்டி, சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் விஜயகாந்த் அவர்களின் வீடு சென்று நலம் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், நடிகர் விஜயகாந்தை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்த வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது.
அவற்றுள், பேச்சுவார்த்தை முடிந்து கிளம்பும் போது, கேப்டனின் கன்னத்தில் செல்லமாக ரஜினிகாந்த் கிள்ளி செல்லும் காணொளியானது ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ளது.
என்னதான், திரைத்துறை மற்றும் அரசியல் வாழ்க்கையில் தனக்கு போட்டியான நடிகர் என்றாலும் இருவருக்குமிடையேயான நட்பினை வெளிப்படுத்தும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூப்பர்ஸ்டார்கேப்டன்❤ pic.twitter.com/4mfIlzfAFj— JSK.GOPI📱 (@JSKGopi) February 22, 2019
Social Plugin