நயன்தாராவுடன், கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பின்னால் நிறைய படவாய்ப்புகளை பெற்று விட்டாரோ என நினைத்தால் அதுவும் இல்லை. இப்படி பிஸியாகவும் இல்லாமல் திடீரென காணாமல் போன அவர், சமூக வலைதள பக்கங்களில் மட்டும் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் இது குறித்து ரசிகர்களும் அவரிடம் கேள்வி எழுப்ப, முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார். அதன் படி, 'தனது குரல் வளத்தை சீராக்கும் சிகிச்சையில் இருந்து வருவதால்தான் இந்த அப்சென்ஸ்' என்பது தெரியந்துள்ளது.
கலக்கப்போவது யாரு, போன்ற நிகழ்ச்சிகளில் ஜாக்லின் அவர்களது குரலை போட்டியாளர்கள் கிண்டல் செய்வதை பார்த்திருப்போம். அது மட்டுமல்லாது, குரல் வளம் இன்மை காரணமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பும் பறிபோனதை தொடர்ந்து, இந்த குரல் வள சிகிச்சையை நாடி இருக்கிறாராம் அவர்.
Social Plugin