விஜய் சேதுபதி நடிப்பில், விரைவில் வெளியாக இருக்கும் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை
பெற்றது. அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி குரலில் ஒலிக்கும், நெடு நீள வசனம் ரசிகர்களை பெரும் அளவில் கவர்ந்தது.
'ஒரு நாள் ஒரு ஆண் மலைப்பாதையில தனியா போகையில, அவன திடீர்னு புலி தொறந்துச்சுனா?' என ஆரம்பித்து பட ட்ரைலர் முழுவதும் ஒலிக்கும், 2 நிமிட தொடர்ச்சியான வசனத்தினை நடிகர் விஜய் சேதுபதி டப்பிங் தியேட்டரில் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அதை பேசி முடிப்பதற்குள் அவர் செய்த தவறுகள், வாங்கிய ரீடேக்குகள் என பார்ப்பவர்களையே தலை சுற்றவைக்கும் அந்த காணொளியில், ஒரு வசனத்திற்காக விஜய் சேதுபதி வெளிப்படுத்திய கடின உழைப்பு தெரிந்தது.
பராசக்தி படத்தில் சிவாஜி பேசி நடித்திருந்த வசனத்திற்கு பின், பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருக்கும் விஜய் சேதுபதியின் இந்த வசனத்திற்கும் அவரது கடின உழைப்பிற்கும் பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
Oru naal..— tylerdurdenandkinofist (@tylerdurdenand1) February 24, 2019
Oru aal..
Dubbing theatre pakkam thaniyaa pogaiyila..#SuperDeluxe #SuperDeluxeFromMarch29 @VijaySethuOffl @Samanthaprabhu2 @thisisysr @sash041075 @itisthatis @ynotxworld @alchemyvisionw1 @onlynikil @SGayathrie @meramyakrishnan @gopiprasannaahttps://t.co/b0B0Ar5au0 pic.twitter.com/tD277mfkyE
Social Plugin