Ad Code

Responsive Advertisement

தமிழகத்தை விஜய் ஆள சிறப்பு பூஜை... விஜய் ரசிகர்கள் செய்த கூத்து


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மறைவுக்கு பின்னர், பெட்டி பாம்பாய் அடங்கி கிடந்த நடிகர்கள் கூட நாடாளும் ஆசையில் அரசியலில் குதித்துவிட்டனர்.

ஏற்கனவே, கமல் ஹாசன், ரஜினி காந்த் என அரசியல் கட்சிகளின் வசவுகளுக்கும், மக்களின் விமர்சனங்களுக்கும் ஆளாகி தமிழகத்தில் ஒரு பிரளயமே நிகழ்ந்து வரும் நிலையில், நடிகர் விஜயையும் அரசியலில் உடனே கோர்த்து விட விஜய் ரசிகர்கள் சிறப்பு பூஜை நடத்தி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றனர்.

நடிகர் விஜயின் அரசியல் ஆசை, தமிழகம் அறிந்த ஒன்றுதான் என்றாலும் இதுவரை என்ட்ரி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் அவரிடம் இருந்து வெளிவரவில்லை.

வருகிற நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, அடுத்த தேர்தலில் விஜய் களம்காணுவார் என திரைத்துறையினர் தெரிவித்து வரும் நிலையில், அவரது அரசியல் வருகை உடனே நிகழ விரும்பும் ரசிகர்கள் சிலர், தமிழகத்தில் அவர் ஆட்சி அமைத்திடவேண்டி சதுரகிரி மலையில் உள்ள 'சுந்தர மகாலிங்க சுவாமி' ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு உள்ளனர்.   

இதில் என்ன சிறப்பு என்றால், பழக்க தோஷத்தில், தியேட்டருக்கு செல்வது போல, கோயிலுக்கும் பேனருடன் சென்று தரிசனம் செய்து இருந்தனர் குறிப்பிட்ட ரசிகர்கள்.