தளபதி 63 திரைப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல்கள் தற்பொழுது கசிய துவங்கி இருக்கிறது.
அட்லீ இயக்கத்தில், தெறி, மெர்சல் திரைப்படங்களை தொடர்ந்து தளபதி விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். சென்னை பின்னி மில்லில் பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஏற்கனவே இது கால்பந்தாட்டம் குறித்த திரைப்படம் என தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் விஜய் கால்பந்தாட்ட அணி ஒன்றின் பயிற்சியாளராக வருகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.
அப்படி பயிற்சியாளராக மட்டும் வந்தால், விஜயின் கதாப்பாத்திரத்தில் வலு இருக்காதே? என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேலும் சுவாரஸ்யம் அளிக்கும் விதத்தில் இத்திரைப்படத்தில், 'விஜய் கால்பந்து பயிற்சியாளராக வர, அவரது அணியில் தேர்வு செய்யப்படும் வீராங்கனைகள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்பட, கொலை பழி விஜயின் மீது விழுகிறது.
கொலைகாரர்களை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார், கொலைப்பழியில் இருந்து தப்பித்தாரா..? என்பதுதான் தளபதி 63 படத்தின் கதைக்களம் என திரையுலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Social Plugin