Ad Code

Responsive Advertisement

'PUBG' விளையாடி அசத்தும் நடிகை சுனைனா - கொண்டாடும் பப்ஜி வெறியர்கள்


உலகம் முழுவதும், மிக மிக பிரபலமான மொபைல் வீடியோ கேம் PUBG(பப்ஜி ). இந்த விளையாட்டிற்கு இந்தியாவில் கிடைத்துள்ள வரவேற்பு குறித்தும் நாம் சொல்லவேண்டியதில்லை.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ள இந்த விளையாட்டிலிருந்து, சினிமா பிரபலங்கள் மட்டும் தப்பிவிட முடியுமா என்ன?..

ஆம், ஜெயம் ரவி உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்கள் இந்த விளையாட்டின் மேல் பைத்தியமாக இருந்துவரும் நிலையில், நடிகை சுனைனாவும் தன் பங்கிற்கு ரசிகர்களுடன் 'PUBG' விளையாடி அசத்தி இருக்கிறார்.

'100 பேர்' பங்கு பெரும் இந்த விளையாட்டில், நான்கு பேர் கொண்ட குழுக்களாக மொத்தத்தம் 25 குழுக்கள் துப்பாக்கி சண்டையிடும். குறிப்பிட்ட நேரத்திற்குள் இறுதிவரை எந்த குழு தப்பி பிழைக்கிறதோ அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர்.

இந்த விளையாட்டை தானும் விளையாடுவது குறித்த சமீபத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்த சுனைனா, எதேச்சையாக தமிழகத்து இளைஞர் ஒருவருடன் இணைந்து விளையாடினார். தன்னை ஹிந்தி மட்டுமே தெரிந்த பெண்ணை போல காட்டிக்கொண்டு, குறிப்பிட்ட இளைஞருடன் அவர் செய்த கலாட்டா தற்பொழுது வீடியோ வடிவில் வைரலாகி வருகிறது.