Ad Code

Responsive Advertisement

'வாய்ப்பு கொடுப்பார்னு அதுக்கு சம்மதித்தேன்' - மீண்டும் சர்ச்சையை கிளப்பும் ஸ்ரீ ரெட்டி


தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த ஸ்ரீ ரெட்டி, ஜுனியர் ஆர்ட்டிஸ்ட் முதல் கிரிக்கெட் வீரர் சச்சின் வரை பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளிவீசி இந்தியா முழுவதும் பிரபலமடைந்து விட்டார்.

அப்படி அவர் தாக்கி பேசிய பிரபலங்களில் நடிகர் நானியும் ஒருவர். தன்னை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக்கொண்டாதாக அவர் வெளியிட்ட குற்றச்சாட்டிற்கு நடிகர் நானியும், வழக்கு தொடுப்பேன் என பதிலடி கொடுத்தார்.

அதன் பிறகு அவர் மீதான ஸ்ரீ ரெட்டியின் குற்றச்சாட்டுகள் காணாமல் போய் இருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் சர்ச்சையை கிளப்ப துவங்கியிருக்கிறார்.


சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்த சமூக வலைதளப்பதிவில், நடிகர் நானி தன்னுடன் பலமுறை உறவு கொண்டதாகவும், வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி தானும் அதற்கு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாது, மது, மாது, புகை என அனைத்து கெட்டபழக்கங்களும் உடையவரான  நானி, தன் வீட்டிற்கே மது வாங்கிவந்து அறுந்த வற்புத்தியதாவும் கூடுதல் குற்றச்சாட்டு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.