Ad Code

Responsive Advertisement

'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல.?' சக நடிகருக்கு வில்லனான காமெடியன்


நிஜ வாழ்வில் மட்டுமல்ல, திரைத்துறையிலும் அதிர்ஷ்டம் எப்பொழுது யாருக்கு கதவை தட்டும் என சொல்ல முடியாது. அப்படி, ஏதோ ஓர் மூலையில் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்து கொண்டிருந்த யோகிபாபு, இன்று தமிழ் சினிமாவின் டாப் காமெடியனாக உயர்ந்திருக்கிறார்.

விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் இடம்பிடித்து விடும் இவரால், பல காமெடி நடிகர்களின் மார்க்கெட் டல்லடித்து போய் கிடக்கிறது.

அப்படி, யோகிபாபுவின் அசுர வளர்ச்சியினால், படவாய்ப்புகள் குறைந்து தவித்து வருகிறார் நம் புரோட்டா சூரி. இதனால் இப்படியே விட்டால், சரிப்பட்டு வராது, தேடிப்போய் படவாய்ப்புகளை கேட்டு வருகிறார். குறிப்பாக யோகி பாபுவை ஒப்பந்தம் செய்திருக்கும் படக்குழுவினரிடம், அவரை விட பலமடங்கு குறைந்த சம்பளத்திற்கு நடித்து தருவதாகவும், சலுகைகளை வழங்கி வருகிறாராம்.


சூரியின் இந்த நடவடிக்கைகள் குறித்து கேள்விப்பட்ட யோகிபாபு, 'எனக்கே விபூதி அடிக்க பாத்தில்ல?' என காக்கா முட்டை படத்தில் பேசும் வசன தோரணையில், சூரி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் திரைப்படங்களை, அவர் வழியிலேயே தன் பக்கம் சாய்த்து வருகின்றாராம்.    

இதையும் படிங்க