எம்மதமும் சம்மதம் என்பதனை பெரும்பாலான தமிழர்கள் என்றுகொண்டுவிட்ட நிலையில், இந்து - கிறிஸ்துவம் - இஸ்லாம் என அனைத்து மதத்தினரும் சகோதர சகோதரிகளாய் சச்சரவின்றி வாழ்ந்து வருகின்றனர்.
அவ்வப்போது, போலி சாமியார்கள், காம பாதிரியார்கள் என ஒரு சிலரால் சர்ச்சைகள் கிளம்பினாலும் அனைத்தையும் கடந்து ஒற்றுமையாக வாழ்பவகர்களே அதிகம்.
அப்படி வைரல் ஆகும் வீடியோக்களை போல, சமூக வலைத்தளங்களை தெறிக்க விட்டு வருகிறது பாதிரியார் ஒருவரின் நடன வீடியோ. பாதிரியார்கள் ஆலயங்களில் கிறிஸ்துவ பாடல்களுக்கு நடனமாடும் வீடியோக்கள் தற்பொழுது சகஜம்.
ஆனால் குறிப்பிட்ட வீடியோவில், நடிகர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் சொடக்கு பாடலுக்கு, செம குத்தாட்டம் போடுகிறார் பாதிரியார் ஒருவர்.
இதற்கு 'கடவுளுக்கு அடுத்து அனைவரும் மதிக்கும் இடத்தில் இருந்து கொண்டு இப்படி ஆடலாமா?' என எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், குழந்தைகள் பெரியவர்கள் என பலரது முகத்தில் சிரிப்பை வரவழைத்த அவரது நடனத்திற்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.
#Sodakku Craze Never Ends .— Suriya Fans Kerala ™ (@SuryaFansKL) February 20, 2019
A Church Father dancing for #Sodakku Song In Kerala ❤️@Suriya_offl @anirudhofficial @VigneshShivN @StudioGreen2 @rajsekarpandian @SuriyaFansClub pic.twitter.com/fvzqGgOeoC
Social Plugin