Ad Code

Responsive Advertisement

சிவகார்த்திகேயனுக்கு கொக்கி போடும் 'மில்க் பியூட்டி' - காரியம் கைகூடுமா?


சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த போது, ஹன்சிகாவுடன் சிவகார்த்திகேயன் நடிப்பதே அவர் தகுதிக்கு மீறிய ஒன்றாக பேசப்பட்டது.

ஆனால் இன்றோ அவர், லேடி சூப்பர் ஸ்டாருடனேயே ஜோடி போடும் அளவிற்கு உயர்ந்து நிற்கிறார். இப்படி இருக்க தற்பொழுது அவருடன் நடிக்க முன்னணி நடிகைகளே  போட்டி போடும் சூழ்நிலை நிலவி வரும் தகவல்களும் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் அதனை நிரூபிக்கும் விதத்தில், மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தமன்னாவும்  சிவகார்த்திகேயனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

முன்பு போல திரையுலகில் அவருக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும், முன்னணி நடிகை அந்தஸ்திலேயே இருக்கும் அவர் நடிப்பில் கண்ணே கலைமானே திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை அளித்துள்ளது.

இத்திரைப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது, சிவகார்த்திகேயனுடன் தான் நடிக்க காத்துக்கொண்டிருப்பது குறித்து மனம் திறந்திருந்தார் தமன்னா.