Ad Code

Responsive Advertisement

தொடர் கொலை மிரட்டல்கள்... போலீசிடம் தஞ்சம் புகுந்த சின்னத்திரை நடிகர்


சின்னத்திரை நடிக, நடிகைகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல சின்னத்திரை நடிகர் வீடு லீசுக்கு வாங்கிய பிரச்சனை காரணமாக போலீசில் தஞ்சம் புகுந்துள்ளார்.

இந்த பிரச்சனை குறித்து பிரபல நாளிதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "மூன்று லட்ச ரூபாய் கொடுத்து லீசுக்கு எடுத்த வீட்டின் மீது, வங்கியில் லோன் எடுக்கப்பட்டு உள்ளதாக கூறி காலி செய்ய சொல்கிறார்கள். 


பாலாஜி என்பவரே, வீடு அவருடையது என ஆவணங்களை காட்டி என்னிடம் லீசுக்கு விட்டிருந்தார். ஆனால் இந்த வீடு ஆறுமுகம் என்பவருடையது என்றும், வீட்டை வைத்து லோன் வாங்கிய அவர்,திருப்பி செலுத்தவில்லை என்பதும், பேங்க்கிலிருந்து வந்து காலி செய்ய சொன்னபோது தான் தெரியவந்தது. 

இந்த பிரச்சனைகளால், என் லீஸ் தொகையை திருப்பி கேட்டபோது, ஆறுமுகம் 'இனி நீங்களாவது பேங்காவது' என பணத்தை திருப்பி தர மறுக்கிறார். இதனால் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், ஆறுமுகத்தின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறேன். போலீசும் விசாரித்து வருகின்றனர்.

'விசாரணை முடியும் வரை, நேரம் கொடுங்கள்' என வங்கியிடம் கேட்டால் மறுக்கிறார்கள். தனியார் ஆட்களை ஏவி மிரட்டுகிறார்கள். ஒருவேளை 'நான் தற்கொலை செய்து கொண்டேன்' என செய்தி வந்தால் நம்பாதீர்கள். அது கண்டிப்பாக கொலையாகத்தான் இருக்கும்". என மன உளைச்சலோடு பேசி இருந்தார்.



திரைப்படங்களில் லோன் வாங்கி திருப்பி செலுத்த முடியாமல் தவிப்பவர்களை வங்கிகள், ரௌடிகளை வைத்து மிரட்டுவது, இதனால் அவர்கள் தற்கொலைக்கு தூண்டப்படுவது போன்ற காட்சிகள் இடம்பெறுவதை பார்த்திருப்போம். ஆனால் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஒருவரே அது போன்ற பிரச்சனையில் சிக்கி தவித்து வருவது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.