Ad Code

Responsive Advertisement

'படப்பிடிப்பில் ஒரு பெண்ணையும் விட்டு வைக்கவில்லை' - பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மூத்த நடிகர்


திரையுலகில் பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இது சம்பந்தமான, #MeToo இயக்கம் இந்தியாவிலும் பிரபலமடைந்ததை தொடர்ந்து, பல பிரபலங்களின் முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில், பாடகி சினிமயி வெளியிடும் தகவல்களே பலருக்கு அதிர்ச்சியளித்திருக்கும் நிலையில், கேரள நடிகை ஒருவரின் குற்றச்சாட்டும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.

கேரள திரையுலகில் ஜுனியர் ஆர்டிஸ்ட்டாக சிறு சிறு வேடங்களில் நடித்து வருபவர், திவ்யா கோபிநாத். இவர் சமீபத்தில் மூத்த குணச்சித்திர நடிகரான அலின்சர் என்பவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

ஆரம்பத்தில், தன்னை யார் என்று தெரிவித்து கொள்ளாமல் இந்த குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வந்த அவர், பேஸ்புக் வீடியோ வழியாக முதன் முறையாக தன்னை வெளிக்காட்டி கொண்டிருந்தார்.


அவர் வெளியிட்ட தகவலின்படி, மூத்த நடிகரான அலின்சர் தான் நடித்த 'ஆபாசம்' எனும் திரைப்பட படப்பிடிப்பின் போது, போதையில் தன் அறைக்கு வந்து சில்மிஷம் செய்ய வற்புறுத்தியதாக தெரியவந்துள்ளது.

தன்னிடம் மட்டுமல்லாது, அத்திரைப்படத்தில் பணி புரிந்த பிற பெண்களிடமும் அவர் தவறாக நடந்து கொண்டதாகவும், அந்த அனுபவங்களை பிற திரைத்துறை நண்பர்களிடம் கூறி மகிழ்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில் தான் கண்டிக்க அழைத்தபோது, 'தெரியாமல் செய்து விட்டதாக' கண்ணீர் விட்டு கதறியதாகவும், ஆனால் அவரது நடவடிக்கைகள் தொடர்ந்து வரும் பட்சத்தில் இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.  

தொடர்புடைய செய்திகள்

திருமணம் ஆனா என்ன..? படுகவர்ச்சி காட்ட தயாராகும் சமந்தா