Ad Code

Responsive Advertisement

"சீமான் ஒரு தேச துரோகி" போட்டு தாக்கும் காயத்ரி


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரது வெறுப்பை சந்தித்த, நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி, சீமான் அவர்களை தேச துரோகி என குறிப்பிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

தமிழ் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், சமீபத்தில் நிகழ்ந்தேறிய புல்வாமா தாக்குதல் குறித்து சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்திருந்தார்.

'இந்தியாவின் நட்பு நாடு எனக்கூறப்படும் இலங்கை, இதுவரை 842 தமிழக மீனவர்களை சுட்டு கொன்றுள்ளது, உள்நாட்டிலேயே ஆந்திர அரசு 20 தமிழர்களை சுட்டு கொன்றது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் ஒரு சிறு இரங்கல் கூட தெரிவிக்காதா இந்திய பிரதமர், இப்பொழுது மட்டும் தேசப்பற்று என பொங்குவது ஏன்?' என சமீபத்தில் பேசி இருந்தார் சீமான்.



இந்த கருத்துக்களை கண்டு பொங்கி எழுந்த பாஜக ஆதரவு காயத்ரி, 'சீமானை அரசியல்வாதியாக நினைக்கவில்லை, அவர் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனுக்கு இணையானவர். சொந்த நாட்டினையே முதுகில் குத்தும் துரோகி' என குறிப்பிட்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீமான் பேசும் காணொளியினையும் பகிர்ந்திருந்தார்.