வாரணம் ஆயிரம், அசல், நடுநிசி நாய்கள், வெடி, வேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ரெட்டி. தற்போது நடிப்புக்கு முழுக்கு
போட்டுள்ள இவர், 2 வருடங்களுக்கு
பிறகு தான் மீண்டும் நடிக்க விரும்பும் தகவலை பகிர்ந்திருக்கிறார்.
இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ள இவர், நடிப்புக்கு முழுக்குபோட்டு மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். இவருக்கு 'ஹான்ஸ்' என்ற மகன் இருக்கிறார். தற்போது 2-வது முறையாக கர்ப்பமாகியிருக்கும் சமீரா தான் கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
'கர்ப்பம் அடைந்த சமயம் எனது உடல் எடை கூடியது. அதனால் பயந்தேன். எனது தோற்றத்தை கண்டு கிண்டல் செய்வார்களே என்று எண்ணினேன். இதையடுத்து வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலேயே முடங்கிக் கிடந்தேன்.
முதல் குழந்தை பிறந்த பிறகு நிம்மதியில் ஆழ்ந்தேன். தாய்மையை அனுபவிக்கத் தொடங்கினேன்.
தற்போது உடல் எடைபற்றி கவலைப்படவில்லை. இன்னும் 2 வருடத்துக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நடிக்க வருவேன். இப்போதெல்லாம் நடிகைகளுக்கு எந்த காலத்திலும் நடிப்பதற்கு நிறையவே கதாபாத்திரங்கள் கிடைக்கிறது’ என தெரிவித்து இருந்தார்.
Social Plugin