புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த இரு தமிழக இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு, நேரில் சென்று தலா ஒரு லட்சம் ரூபாயை உதவி தொகையாக வழங்கினார் நடிகர் ரோபோ சங்கர்.
காஸ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 44 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரை சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் அடக்கம்.
இவர்களின் மறைவு குறித்து தனது இரங்கலை, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்த நடிகர் ரோபோ சங்கர், வீரர்களின் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய், உதவி தொகை வழங்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
— Robo Shankar (@imroboshankar) February 16, 2019
அவர் சொன்னதை போலவே நேற்று, மறைந்த வீரர்களின் வீட்டிற்கே சென்று தனது இரங்கலை தெரிவித்த அவர், உதவி தொகையினையும் வழங்கி நெகிழ்ச்சியடைய செய்தார்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் பெரிய பெரிய நடிகர்களே, இந்த சம்பவம் குறித்து கண்டுகொள்ளாது மௌனம் காத்துவரும் நிலையில், நடிகர் ரோபோ சங்கர் செய்த இந்த உதவி பாராட்டுகளை பெற்றுவருகிறது.
Social Plugin