இந்தியாவுக்கு எதிரான புல்வாமா தாக்குதலுக்கு, பாகிஸ்தான் தீவிரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை நேற்று குண்டுமழை பொழிந்து தக்க பதிலடி கொடுத்தது. இதனை பாராட்டி பல்வேறு திரைத்துறையினர் பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
அவர்களைப் போல நடிகர் ரஜினிகாந்தும், தனது வாழ்த்துக்களை தெரிவிக்க, அதற்கு ரசிகர் ஒருவர் கொடுத்த குறும்பு பதில் பலரது கவனத்தையும் ஈர்த்தது.
குறிப்பிட்ட பதிவில், இந்திய ராணுவத்தை பாராட்டும் தோணியில் 'பிராவோ இந்தியா' என குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த். இதற்கு 'தலைவரே பிராவோ வெஸ்ட் இண்டீஸ்' என கிரிக்கெட் வீரர் பெயருடன் தொடர்பு படுத்தி கிண்டலாக பதிவு செய்ய, பலரையும் குபீரென சிரிக்க வைத்தது.
Social Plugin