Ad Code

Responsive Advertisement

ஆபாச உடை சர்ச்சை..! 'SPB' சொன்னதை சரி என தொடர்ந்து நிரூபிக்கும் தமிழ் நடிகைகள்


பாடகர் S.P. பாலசுப்ரமணியம், சில நாட்களுக்கு முன்பு நடிகைகளின் கவர்ச்சி உடைகள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சைகளை கிளப்பியது.

'படவிழாக்களுக்கு வரும் போது எப்படி உடை அணியவேண்டும் என்ற, தெளிவு கூட இல்லாதவர்கள் நடிகைகள். 'இதனை அவர்களுக்கு விவரம் தெரியாமல் செய்கிறார்கள் என்று சொல்வதா? அல்லது நடிகர்கள், இயக்குனர்களின் கவனத்தை ஈர்த்து படவாய்ப்புகளை பெறுவதற்காக செய்கிறார்கள் என்று சொல்வதா என தெரியவில்லை.' என்ற அவரது கருத்துக்கு கண்டனங்கள் எழுந்த நிலையிலும், 'தான் அந்த கருத்தில் உறுதியாக இருப்பதாக' கூறி மன்னிப்புகேட்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் அவரது இந்த கூற்று சரி என நிரூபிக்கும்  விதத்திலேயே இருந்து வருகிறது சமீத்திய நடிகைகளின் நடவடிக்கை. சமூக வலைதளபதிவுகள், சினிமா நிகழ்ச்சிகள் என கவர்ச்சி பொங்கும் ஆடைகளை, நாயகிகள் தொடர்ந்து உடுத்தி வருவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.


ராய் லக்ஸ்மி, கேத்தரின் தெரேசா, வேதிகா என நாயகிகள் அணிந்த கவர்ச்சி உடைகள் தான் சமீபத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை கண்ட திரையுலகினரும், ரசிகர்களும் 'SPB சார் சொன்னது 100% உண்மை' என அவரது கருத்திற்கு ஆதரவு அளிக்க துவங்கியுள்ளனர்.