Ad Code

Responsive Advertisement

'திருமணம் செய்து கொள்ளாமல் வாழ விருப்பம்' - ஓவியா பளிச்


துறுதுறுவென, எதையும் வெளிப்படையாக பேசிவிடும் ஓவியாவின் அந்த இயல்புதான் பிக்பாஸ் ரசிகர்களை ஓவியா ஆர்மியாக்கியது. இந்த மாபெரும் பிரபலத்திற்கு பின், அவர் நடிப்பில் முதன்முறையாக '90ml' எனும் திரைப்படம் திரைக்குவர உள்ளது. 

ட்ரைலரிலேயே பல சர்ச்சைகளை வாரி குவித்த இத்திரைப்பட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க, அதன் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் ஓவியா.

அதன் ஒருபகுதியாக பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், 90ml திரைப்படம் குறித்தும் தன்னை பற்றிய பல கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அவற்றுள், 'திருமணம் செய்து கொள்ள விருப்பமா? அல்லது 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்'பில் வாழ விருப்பமா?' என்ற கேள்வியும் அவர் முன் வைக்கப்பட்டது.

இதற்கு சற்றும்  யோசிக்காமல், திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தும் 'லிவ் இன் ரிலேஷன்ஷிப்' முறையை பதிலாக கூறி இருந்தார் ஓவியா. மேலும் ஆரவ் உடனான காதல் குறித்த கேள்விக்கு இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் அவர் கூறிய பதிலால், 'அப்போ அந்த லிவ் இன் ரிலேஷன்ஷிப் ஜோடி ஆரவ் தானா?' என கேள்வி எழுப்ப துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.