Ad Code

Responsive Advertisement

'மொதல்ல நீங்க ஒழுங்கா இருங்க' 90ml விமர்சனங்களுக்கு ஓவியாவின் சர்ச்சை பதில்


ஓவியா நடிப்பில் வருகிற மார்ச் 1ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் 90ml. 18வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்கும் அடல்ட் திரைப்படமாக உருவாகி இருக்கும் இதன் ட்ரைலர் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது.

குடி, கும்மாளம் என தமிழ் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிராக இப்படம் உருவாகி இருப்பதாக பலர், ஓவியாவையும் பிற படக்குழுவினரையும் சகட்டு மேனிக்கு விமர்சித்து தள்ளினர்.

இந்த விமர்சனங்கள் குறித்து அண்மையில் பதிலளித்து இருந்த அவர், ஒரு நடிகையாக இயக்குனர் கூறியதை நான் செய்திருக்கிறேன். 'என்னை பார்த்து பிறர் கெட்டுப்போய் விடுவார்கள்' எனும் கருத்து சிறுபிள்ளை தனமாக உள்ளது.

'முதலில் நீங்கள் ஏன் நடிக, நடிகைகளை ரோல் மாடலாக எடுக்கின்றீர்கள். நான் சிறுமியாக இருந்த போது என் ரோல்மாடல் பெற்றோர்தான்.

பிள்ளைகள் உங்களை ரோல்மாடலாக எடுக்கும் அளவிற்கு, நீங்கள் முதலில் ஒழுங்காக இருங்கள். இத்திரைப்படம் பார்த்து கலாச்சாரம் சீரழிந்து விடும், பெண்களை பற்றிய இப்படம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள்' என சர்ச்சையான முறையில் பதிலளித்து இருந்தார்.