Ad Code

Responsive Advertisement

கைவிடப்படும் நிலையில் 'இந்தியன்-2' - ஷங்கருக்கு வந்த சோதனை


தொடர்ந்து பல இடையூறுகளை சந்தித்து வரும் இந்தியன் - 2 திரைப்படம், கைவிடப்படும் ஆபாத்தான நிலையில் இருப்பதாக, சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

1996ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பினை, பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போது இயக்குனர் சங்கர் மற்றும் கமல் அறிவித்தனர்.

இந்த திரைப்படத்தினை துவங்க, ஷங்கர் என்னென்ன முயற்சிகள் எடுத்தாலும், கமல் தாமதம் செய்ய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனும் முடிந்த அரை வருடம் ஆகிவிட்டது.


ஒருவழியாக ஜனவரி 18ம் தேதி துவங்கி ஒரு சில நாட்கள் நடந்த படப்பிடிப்புகள், திடீரென நிறுத்தி வைக்கப்பட்டது. என்னவென்று விசாரிக்கையில் இப்படத்திற்காக போடப்பட்ட செட் திருப்திகரமாக இல்லை எனக்கூறி இயக்குனர் ஷங்கர் படப்பிடிப்பை தள்ளிவைத்து தெரியந்துள்ளது.

இதனால் மிகுந்த அதிருப்தி அடைந்த தயாரிப்பு நிறுவனம் லைகா, 2.0 திரைப்படத்தின் வீண் செலவுகளை கருத்தில் கொண்டு, இந்தியன் 2 படத்திற்கான சரியான பட்ஜெட்டினை தெரிவிக்குமாறு ஷங்கருக்கு உத்தரவிட்டுள்ளது.   

மேலும் எதிர்பார்த்த வசூலை 2.0 கொடுத்திராத நிலையில், இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிரமாண்ட செலவுகளை அந்நிறுவனம் தவிர்க்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.


இயக்குனர் சங்கரோ, பிரமாண்டம் மேல் பிரமாண்டத்தினை புகுத்த நினைக்கும் ஒருவர் எனும் நிலையில், தயாரிப்பு நிறுவனமோ பட்ஜெட்டில் எடுத்து கொடுக்க நிர்பந்தித்து வருவதால், இந்தியன் 2 கைவிடப்பட்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.