Ad Code

Responsive Advertisement

'10 வயதிலேயே பலமுறை உறவு வைத்து கொண்டார்' சின்மயி வெளியிட்ட அதிர்ச்சி பதிவு


'மீட்டூ (#MeToo)' பதிவுகளின் மூலம் திரையுலகினரை கதிகலங்க செய்தவர் பாடகி சின்மயி. திரையுலகினரால் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து பலர் வெளியிட்ட தகவல்களை, தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பிய அவர், தொடர்ந்து அதிர்ச்சிகர பாலியல் சீண்டல் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவு ஒன்றில், இளம் பெண் ஒருவர் 10 வயதில் தான் சந்தித்த பாலியல் சீண்டல்கள் பற்றி பேசி இருந்த பதிவுகள் இடம்பெற்று இருந்தது.

விவரம் தெரியாத வயதில், வெளியே பயிரை மேய்ந்த கதையாக உறவினர் ஒருவரே, தகாத முறையில் நடந்துகொண்டது. இறுதியில் தான் ஒரு 10 வயது பெண் தான் என்றும் பாராமல், பலமுறை உறவு வைத்துக்கொண்டது.

விவரம் தெரிந்த வயதில், இந்த சம்பவம் குறித்து வெளியே சொல்ல முடியாமல், 'எங்கே கர்ப்படைந்து விடுவேனோ' என கலங்கியது, குறித்த தகவல்கள் அந்த பதிவில் இடம்பெற்று இருந்தது.



பிறரின் விழிப்புணர்வுக்காக இந்த பதிவை சின்மயி பகிர்ந்திருப்பதாக தெரிவித்து வரும் நிலையில், ஒருபுறம் பாராட்டுகளும் மறுபுறம் எதிர்மறை விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.