Ad Code

Responsive Advertisement

என் வாழ்க்கையையே மாற்றியவர் ரஜினி... புகழும் தல அஜித்


நடிகர் அஜித், திரையுலகினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பேசும் போது அடிக்கடி கூறும் விஷயங்கள் ஒரு சில உண்டு. அதில் தனது வாழ்க்கையை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எவ்வாறு மாற்றினார் என்கிற சுவாரஸ்ய நிகழ்வும் ஒன்று.

இன்று தன்னடக்கத்தின் அடையாளமாக திகழ்கிறார் நடிகர் அஜித். எவ்வளவு உயரம் சென்றிருந்தாலும், தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் அதே பணிவு, அடக்கத்துடன் நடந்து கொண்டு பலரையும் வியக்க வைத்தவர்.

அவரது இந்த குணத்திற்கு அடிப்படை காரணமாக விளங்கியது, நடிகர் ரஜினிகாந்த் பரிசளித்த ஒரு புத்தகம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், 'லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்' எனும் வாழ்க்கை மற்றும் ஆன்மிகம் குறித்த இப்புத்தகம் தான் ரஜினி மற்றும் அஜித் ஆகிய இருபெரும் நட்சத்திரங்களை கவர்ந்த ஒன்று.



இமயமலையில் வசிக்கும் ஆன்மிக குருக்களுடனான அனுபவம் குறித்த இப்புத்தகம் தான், ரஜினியின் இமயமலை பயணங்களின் பின்னணியிலும் இருப்பதாக பேசப்படுகிறது.

இப்புத்தகத்தை பலமுறை படித்தும் சலிக்காத ரஜினிகாந்த், 'இதனை எத்தனை முறை படித்தாலும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்கிறேன். தவறாது நீங்களும் படியுங்கள்' என குறிப்பிட்ட புத்தகத்தை தனக்கு பரிசளிக்க, அந்த நிகழ்வு தான் தன் வாழ்வை மாற்றியதாக பகிர்ந்து வருகிறாராம் தல அஜித்.