எங்க வீட்டு மாப்பிள்ளை எனும் நிகழ்ச்சியின் மூலம், ஆர்யா திருமண ஆசை காட்டி கழட்டி விட்ட பெண்களில் ஒருவர்தான் அபர்ணதி. இவர் ஆர்யா - சாயிஸா திருமணம் குறித்து முதன் முறையாக மனம் திறந்து இருக்கிறார்.
ஆசை பட்ட திருமண வாழ்க்கை கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரை ரசிகர்களிடையே கிடைத்த பிரபலத்தால் தற்பொழுது வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் அபர்ணதி.
வசந்தபாலன் இயக்கத்தில், G.V. பிரகாசுக்கு ஜோடியாக நடித்திருக்கும் 'ஜெயில்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாக இருக்கும் இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்யா திருமணம் குறித்து பேசி இருந்தார்.
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு பின், சிறிது காலம் பேசிக்கொண்டாலும் ஆர்யாவுடனான நட்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டது. மெஸேஜில் கூட இப்பொழுது பேசிக்கொள்ளவில்லை. தற்பொழுது முழுக்க முழுக்க நடிப்பில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.
ஆர்யா சாயிஸா திருமணம் குறித்த செய்தியை கேட்டபோது, வதந்தி என நினைத்தேன். ஆனால் அவர்களே தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். ஆனாலும் நான் அழவில்லை, அதற்கு எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி கொடுத்த மன வலிமை காரணம் என நினைக்கிறேன். என குறிப்பிட்டு இருந்தார்.
Social Plugin