ஆஸ்கார் வென்ற, 'ஸ்லம் டாக் மில்லியனர்' திரைப்படத்தின் 10வது ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் மும்பை தாராவி பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், A.R ரஹ்மானின் மகள் கதிஜா, இஸ்லாமியர்களின் பாரம்பரிய ஹிஜாப் உடையில் தோன்றி இருந்தார். ஏற்கனவே, உலகம் முழுவதும், 'இந்த உடை இஸ்லாமிய பெண்களை கட்டாயப்படுத்தி, அவர்களின் சுதந்திரத்தை பறிப்பது' போல இருப்பதாக கூறி, மதவாதிகள் பலர் சர்ச்சையான முறையில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், A.R ரஹ்மானின் மகள், அந்த உடையில் தோன்றி இருந்தது குறித்தும், பலர் எதிர்மறை கருத்துக்களை அள்ளிவீச துவங்கினர். 'மேடையில் தனது பிள்ளைகளுக்கு தான் முழு சுதந்திரம் அளிப்பதாக பேசிவிட்டு, ஹிஜாப் உடையை அணியவைத்து கட்டாயப்படுத்தி இருக்கிறாரே' எனவும் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த சர்ச்சை கருத்துக்களுக்கு பதிலாக, தனது மனைவி, மகள்கள் அடங்கிய புகைப்படத்தினை வெளியிட்டு இருந்த ரஹ்மான், அதன் மூலம் 'எந்த உடை அணியவேண்டும் என்ற முழு சுதந்திரமும் தனது வீட்டு பெண்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை நாசுக்காகதெரிவித்து இருந்தார்.
The precious ladies of my family Khatija ,Raheema and Sairaa with NitaAmbaniji #freedomtochoose pic.twitter.com/H2DZePYOtA— A.R.Rahman (@arrahman) February 6, 2019
குட்டி சொர்ணாக்காவின் "சினிமா ஆசை" நிறைவேற்றி வைப்பாரா தளபதி..?
Social Plugin