Ad Code

Responsive Advertisement

'விஸ்வாசம்' 50வது நாள் கொண்டாட்டங்களுக்கு ஆப்பு வைத்த அமேசான்... அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்


அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 28ம் தேதி 50வது நாளை தொட இருந்தது. இதனை கோலாகலமாக கொண்டாட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் தயாராக இருந்தனர்.

இந்நிலையில், அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் விஸ்வாசம் திரைப்படத்தினை வெளியிட்டிருக்கிறது, ஆன்லைன் பொழுதுபோக்கு தளமான 'அமேசான் ப்ரைம் வீடியோ'.

விஸ்வாசம் திரைப்பட ஆன்லைன் ஒளிபரப்பு உரிமையை 11 கோடிக்கு வாங்கி இருந்த அமேசான் நிறுவனம், அத்திரைப்படத்தினை, கடந்த 25ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தது.

இதற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் 50வது நாள் கொண்டாட்டங்களுக்கு பிறகு 'விஸ்வாசம்' திரைப்படத்தினை ரிலீஸ் செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதன் பிறகு விஸ்வாசம் ரிலீஸ் குறித்து நிலையற்ற பதில்களை வழங்கி வந்த அந்நிறுவனம், சொல்லாமல் கொள்ளாமல் திடீரென, நேற்று அத்திரைப்படத்தினை வெளியிட்டு 50வது நாள் கொண்டாட்டங்களுக்கு ஆப்பு வைத்துள்ளது.