நடிகர் அஜித், பாகுபலி பிரபலம் பிரபாஸ் நடித்து கொண்டிருக்கும் புதிய படத்தின் செட்டிற்கே சென்று, இன்ப அதிர்ச்சி அளித்திருக்கிறார்.
விஸ்வாசம் திரைப்படத்தினை தொடர்ந்து அஜித், தற்பொழுது போனிகபூர் தயாரிப்பில் 'பிங்க்' திரைப்பட ரீமேக்கில் நடித்து வருகிறார். வழக்கமான போல இந்த திரைப்படமும், ஆந்திராவின் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
பாகுபலி பிரபலம் பிரபாஸ் நடிக்கும் 'சகோ' திரைப்படத்தின் படப்பிடிப்பும் அருகே நடைபெற்ற நிலையில், அதன் செட்டிற்கு திடீர் விசிட் அடித்த நடிகர் அஜித், தனது வழக்கமான பாணியில் பிரியாணி சமைத்து பரிமாறி அசத்தி இருக்கிறார்.
தீவிர உணவுப்பிரியரான பிரபாஸும், தல அஜித்தின் சமையல் கைப்பக்குவத்தை கண்டு மிரண்டு போய் விட்டாராம்.
Social Plugin