முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் சமயத்தில், இளம் நடிகையின் திருமண அறிவிப்பு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அறிமுகமான ஒரு சில திரைப்படங்களிலேயே, முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று அசத்தினார் குறிப்பிட்ட நடிகை. விரைவில் இவரை விஜய், அஜித் போன்ற பிரமாண்ட நடிகர்களுக்கு ஜோடியாக பார்க்கலாம் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சர்ச்சை நடிகருடன் திருமணம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
என்னவென்று விசாரிக்கையில், இளம் நடிகைக்கு உடனடி திருமணத்தில் ஈடுபாடு இல்லையென்றாலும், நடன இயக்குனர் ஒருவருடன் காதல் என்று பரவிய வதந்திதான் இந்த முடிவிற்கு தள்ளி இருக்கிறது என தெரிவிக்கின்றன சினிமா வட்டாரங்கள்.
குறிப்பிட்ட நடன இயக்குனரை, 'நாயகி தீவிரமாக காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம்' எனவும் பரவிய அந்த வதந்தியால் பதறிய நாயகியின் பெற்றோர், திருமண வரன் தேட துவங்க, வேறு வழியின்றி, தனக்கு பிடித்த நடிகரையே மணமகனாக தேர்வு செய்திருக்கிறாராம் இளம் நடிகை.
Social Plugin