Ad Code

Responsive Advertisement

'முதல்ல நீங்க சரியா இருங்க, அப்புறம் சிஸ்டத்தை சரி பண்ணலாம்' மனைவியால் மீண்டும் சிக்கலில் ரஜினி


தமிழக அரசியலில் சிஸ்டம் சரியில்லை என கூறி, அரசியலில் நுழைந்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் அவர் வீட்டிலேயே சிஸ்டம் சரியில்லையே என பிறர் கூறும் அளவிற்கு நிகழ்ந்துள்ளது சமீபத்திய சம்பவம் ஒன்று.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான லதா ரஜினிகாந்த் அவர்கள் நடத்தும் தி ஆஷ்ரம் எனும் பள்ளியானது, சென்னை கிண்டியில் அமைந்துள்ளது. முழுக்க முழுக்க மேல்தட்டு மக்களின் குழந்தைகள் படிக்கும் இப்பள்ளியில், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பள பாக்கி வைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.  

இப்படி ஒரு சூழ்நிலையில் அப்பள்ளியின் பேருந்து ஓட்டுனர்கள், 'சம்பள பாக்கியை செட்டில் செய்யும் வரை பேருந்துகளை இயக்க மாட்டோம்' என வேலை நிறுத்தம் செய்துள்ளனர். இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலையும் நிலவி வருகிறது.


இதனை அறிந்து 'படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்கும், நடிகர் ரஜினியின் மனைவி நடத்தும் பள்ளியில் சம்பள பாக்கியா' என அதிர்ச்சியில் உறைந்திருக்கும் திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள், 'இவரா சிஸ்டத்தை சரி செய்ய போகிறார். முதலில் குடும்பத்தை ஒழுங்காக நிர்வாகிங்க' என சகட்டு மேனிக்கு விமர்சித்து வருகின்றனர்.

ரஜினிக்கு சினிமாவில் ஏகப்பட்ட வில்லன்கள் இருக்கலாம், ஆனால் அரசியல் வாழ்வில் ஒரே ஒரு வில்லி தான் என சொல்லும் அளவிற்கு,   அரசு கட்டிட வாடகை பாக்கி, வேலைக்கார பெண்ணை நிற்க வைத்து படம் பார்த்தது, பள்ளி பணியாளர்கள் சம்பள பாக்கி எனஅடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி, அவரது அரசியல்அடித்தளத்தை ஆட்டி பார்த்து வருகிறார் மனைவி லதா ரஜினிகாந்த்.