லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, 'ஐரா' திரைப்படத்தில் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடித்திருப்பது அப்படத்தின் பாடலின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுவரை, அழகு பதுமையாக, ரசிகர்களை ஜொல்லுவிட வைக்கும் ஒருவராக நடித்து வந்த நயன்தாரா முதன் முறையாக, அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஒரு கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்.
லக்ஸ்மி, மா போன்ற சர்ச்சை குறும்படங்களை இயக்கிய சார்ஜுனின் இயக்கத்தில், KJR ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஐரா.
நயன்தாரா இரண்டு வேடங்களில் அசத்த இருக்கும் இத்திரைப்படத்தில், மேக்கப் அணியாத, மாநிற கிராமத்து பெண்ணாகவும், மாடர்ன் நகரத்து பெண்ணாகவும் நடித்து இருக்கிறார்.
Social Plugin