Ad Code

Responsive Advertisement

'போலி புகைப்படம்' ரசிகர்களை ஏமாற்றிய அனுஸ்கா.! உண்மை தோற்றம் வெளியானதால் அதிர்ச்சி


தமிழ், தெலுங்கு திரையுலகில் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக வலம்வந்தவர் அனுஸ்கா. நடிகையாவதற்கு முன்பே உடல் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துபவராக இருந்த இவருக்கு பெரிய தலைவலியாக இருந்து வந்தது உடல் எடை பிரச்சனை.

கட்டுக்கோப்பாக வைத்திருந்த உடலை, ஒல்லி பெல்லி திரைப்படத்திற்காக விட்டுக்கொடுக்க, தாறுமாறாக ஏறியது எடை. அதன் பின் அவர் எவ்வளவு முயற்சித்தும் கூடியதை குறைக்க முடியவில்லை.

இதனால் முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் பறிபோக, திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்பது போல, சமீபத்தில்; தான் மீண்டும் ஒல்லியான தோற்றத்திற்கு மாறிய புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.


ஆனால் இயக்குனர் 'கொடி ராமகிருஷ்ணா' அவர்களின் இறுதி சடங்கில் அனுஸ்கா கலந்துகொள்ள, வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது அவரது தரப்பின் தில்லுமுல்லு.

ஆம், சில வாரங்களுக்கு முன்பு வெளியான புகைப்படம் போல அவர் ஒல்லியாகி விடவில்லை. வழக்கமான குண்டான தோற்றத்திலேயே அவர் காட்சியளித்தார்.


இதனால் அந்த புகைப்படம், போட்டோஷாப் மூலம் மாற்றியமைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம், என திரையுலகினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் புதிய பட வாய்ப்புகளை ஈர்க்கவும், அவர் நடித்து வரும் புதிய படத்தின் ப்ரமோஷனுக்காகவும் அனுஸ்கா இதை செய்திருப்பதாக கிசு கிசுக்கப்படுகிறது.

வழக்கமாக போட்டோஷாப் செய்த புகைப்படங்கள் மூலம், சமூக வலைதள அரசியல் நடைபெற்று வரும் நிலையில், அதே பாணியில் அனுஸ்கா ரசிகர்களை ஏமாற்றி இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.     

தொடர்புடைய செய்திகள்

'திருமணம் செய்து கொள்ளாமல் வாழ விருப்பம்' - ஓவியா பளிச்