Ad Code

Responsive Advertisement

'பெண்கள் பண்ணா என்ன தப்பு..?' 90ml ட்ரைலர் சர்ச்சைகளுக்கு பதிலடி


ஓவியா நடிப்பில் வெளிவரவுள்ள, 90ml திரைப்படத்தின் ட்ரைலர் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.  ஏற்கனவே கலாச்சாரம் சீர்குலைந்து விட்டதாக புலம்புபவர்களுக்கு மத்தியில், குடி, இரட்டை அர்த்த வார்த்தைகள், ஆபாச வசனங்கள் என  சர்ச்சை தீயினை கொழுந்துவிட்டு ஏறிய செய்திருக்கிறது 90ml ட்ரைலர்.

இதனையடுத்து, ஓவியாவை ரசித்த ஓவியா ஆர்மியினரே அவரை விமர்சிக்க துவங்கியுள்ள நிலையில், 'ட்ரைலரை மட்டும் பார்த்துவிட்டு படத்தை பற்றி தவறாக எண்ண வேண்டாம்' என பதிலளித்து இருந்தார் ஓவியா.

அவரை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனரான அனிதா உதீப்பும், 'பெண்கள் குடித்தால், இரட்டை அர்த்த வசனம் பேசினால் என்ன தப்பு..? யாருக்கும் பயப்படாமல் பெண்களை சுதந்திரமாக வாழ சொல்கிற படம் தான் இது.

சர்ச்சைக்காட்சிகள் என கூறப்படும் ஒவ்வொன்றிற்கும் பின்னால், ஒரு விளக்கம் இருக்கும். அதன் நியாயம் படம் பார்த்தால் உங்களுக்கு புரியும்' என விளக்கம் அளித்திருந்தார்.

ரசிகர்கள் சிலரும், 'ஓவியாவை பார்த்து அவரை ரோல்மாடலாக நினைக்கும் பெண்கள் கேட்டுவிடுவார்கள் என்று சொல்பவர்களே, திரைப்படங்களில் விஜய், அஜித் போன்ற நாயகர்கள் புகை பிடிக்கும்போதும், மது அருந்தும்போதும் மட்டும் ரசிகர்கள் கேட்டு போய்விடமாட்டார்களா..?' என ஓவியா தரப்பினருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.