Ad Code

Responsive Advertisement

90களில் கலக்கிய குழந்தை நட்சத்திரங்கள் அன்றும் இன்றும்

திரைப்படங்களில் மழலை மாறாத வயதில் அருமையாக நடித்து ரசிகர்ளை கட்டிப்போடுபவர்கள் குழந்தை நட்சத்திரங்கள். இன்று பேபி சாரா, பேபி அனிகா என ரசிகர்களை கவர்ந்து வரும் குழந்தை நட்சத்திரங்கள் இருக்க, 90 களில் நம் மனம் கவர்ந்த குழந்தை நட்சத்திரங்களும் அவர்களது இப்போதைய நிலை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சுனைனா


அம்மன் திரைப்படத்தில், தெய்வீக குழந்தையாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் சுனைனா. வட்ட முகம், பெரிய கண்களுடன் பார்ப்பதற்கு நிஜ அம்மனை பார்ப்பது போன்று இருப்பதாக, பலராலும் பாராட்டப்பட்ட இவர், இன்று இணைய உலகில் பிரபல வலைதளபேச்சாளராக இருந்து வருகிறார்.

சுஜிதா 


கிட்டத்தட்ட 22, தமிழ் மலையாளம் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியவர் சுஜிதா. இவர் நடித்த படங்களில் சத்யராஜின் பூவிழி வாசலிலே இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. இப்படி குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்திய இவர், இன்று சின்னத்திரையுலகில் படு பிசியாக நடித்து வருகிறார்.

அன் அலெக்ஸியா அன்ட்ரா 


அவ்வை சண்முகி திரைப்படத்தில், தந்தையின் மேல் உயிரையே வைத்திருக்கும் துரு துரு குழந்தையாக நடித்திருந்தவர் 'அன் அலெக்ஸியா அன்ட்ரா'. அதன் பிறகு ஒரு சில ஹிந்தி திரைப்படங்களில் நடித்திருந்த இவர், திரையுலகில் ஜொலிக்கவில்லை என்றாலும் சமூக சேவகியாக பிரகாசித்து வருகிறார்.

குட்டி விஜய் ஜெயந்த் 



விஜய், சூர்யா ஆகிய நடிகர்களின் குழந்தை பருவ கதாப்பாத்திரங்களில் நடித்தவர் ஜெயந்த். என்றாலும் பிரண்ட்ஸ் படத்தில் இவரது காதாப்பாத்திரம் கொடுத்த பிரபலம் இன்றுவரை குட்டி விஜய் என்றே பலராலும் அழைக்கப்படுகிறார். பட்ட படிப்பு முடித்து விட்டு, உதவி இயக்குனராக பணிபுரிந்து வரும் ஜெயந்த், தமிழ் சினிமாவில் நாயகன் ஆக வேண்டும் என்றவிருப்பத்துடன், குறும்படங்களிலும் நடித்து வருகிறார்.

ஷாலினி, ஷாம்லி 



90களில் விளம்பரங்கள், திரைபபடங்கள் என தமிழ், மலையாள திரையுலகில் அசத்தியவர் ஷாலினி மற்றும் ஷாம்லி. அக்கா, தங்கையான இவர்கள் நாயகியாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தனர். அக்கா ஷாலினி, நடிகர் அஜித்தை திருமணம் செய்து கொண்டு, திரையுலகிற்கு குட்பாய் சொல்லிவிட, ஷாம்லி இன்றும் முன்னணி நாயகியாக வேண்டுமென்ற கனவோடு தொடர்ந்து நடித்து வருகிறார்.