Saturday, 2 June 2018

வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் நடிகனான யோகிபாபு..! வாழ்வை திருப்பி போட்ட அந்த தருணம்


முன்னணி காமெடி நடிகர்கள் அனைவரும் நாயகனாகிவிட்ட நிலையில், நடிகர் யோகிபாபு தான் இப்பொழுது டாப்பில் இருக்கிறார். விஜய், அஜித் என முன்னணி நாயகர்களோடு நடிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கும் இவர், சினிமா துறைக்கு எப்படி வந்தார் என்பதே ஒரு சுவாரஸ்யமான கதைதான்.

யோகிபாபு திரைப்படங்களில் நடிப்பதற்கு முன், தனியார் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான 'லொள்ளு சபா' எனும் நிகழ்ச்சியில் ஜூனியர் ஆர்டிஸ்டாகதான் முதன் முதலில் நடிக்க துவங்கி இருந்தார்.

சந்தானம் போன்ற பல சினிமா நடிகர்களை உருவாக்கி இருக்கும் அந்த நிகழ்ச்சியில், யோகிபாபுவின் நண்பர்தான் முதலில் ஜூனியர் ஆர்டிஸ்டாக பணி புரிந்து வந்திருக்கிறார்.  ஒருமுறை அவருக்கு கம்பெனி கொடுக்க ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருந்தாராம் யோகிபாபு.


அப்பொழுது அவரது வித்யாசமான தோற்றத்தையும் குரலையும் பார்த்து, அந்நிகழ்ச்சியின் இயக்குனரான ராம்பாலா, அவரை நடிக்க அளித்திருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கினாலும், பின்னர் ஒப்புக்கொண்டு நடித்திருந்த யோகிபாபு அந்நிகழ்ச்சியின் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தாராம்.


அந்நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த வாய்ப்பில், அமீரின் ராம் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார் யோகிபாபு.

    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();