Friday, 1 June 2018

தன்னை வைத்து நடத்தப்பட்ட அரசியல் விளையாட்டு - உஷாரான விஜய் சேதுபதி


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தமிழக மக்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். நடிப்போடு மட்டும் நின்று விடாமல், சமூகத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ளதால், ஏக்கப்பட்ட ரசிகர்களை இவர் சம்பாதித்திருக்கிறார்.

இந்நிலையில், தன் பெயரில் சமூக வலைதளங்களில் அதிக அளவில் வலம்வரும் போலி கணக்குகளுக்கு முற்று புள்ளி வைக்கும் நடவடிக்கையை எடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.   

தற்பொழுது சினிமா பிரபலங்கள், தங்களது ரசிகர்களோடு இணைந்திருக்க சமூக வலைதளங்களை  உபயோகித்து வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதியும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வ கணக்குகள் வைத்திருக்கும் நிலையில், ட்விட்டரில் கணக்கு தொடங்காமல் இருந்து வந்தார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட ஒரு சில நெட்டிசன்கள், டிவிட்டரில் விஜய் சேதுபதியின் பெயரில் கணக்குள் உருவாக்கி, அதில் சர்சைக்குள்ளான ரஜினியின் அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த விஜய் சேதுபதியின் தரப்பு, சிறிதும் தாமதிக்காமல் ட்விட்டர் பக்கத்திலும் தனக்கென அதிகாரபூர்வ கணக்கு ஆரம்பித்து, ட்விட்டரில் வலம்வரும் போலி பக்கங்களுக்கும் அதில் வெளியாகி இருக்கும் பதிவுகளுக்கும் தனக்கு சம்பந்தமில்லை என்ற பதிவினையும் வெளியிட்டிருக்கிறார்.
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();