Breaking News

நயன்தாராவிற்கு திருமண தூதுவிடும் விக்னேஷ் சிவன் - நீங்க நடத்துங்க பாஸ்...


பல கட்ட காதல் தோல்விகளுக்கு பின், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு தற்பொழுது ஒரு நிலையான காதல் அமைந்திருப்பதாகவே தெரிகிறது. 'நானும் ரௌடிதான்' படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடனான நட்பு காதலாக மலர்ந்ததை தொடர்ந்து, நடிகை நயன்தாராவின் காதல் ஜெட் வேகத்தில் இடையூறு ஏதும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

இடையிடையே உலகம் சுற்றியும் வரும் இந்த காதல் பறவைகள், எந்த தயக்கமும் இன்றி, இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்தும் வருகின்றனர்.

விரைவில், இவர்களது திருமண அறிவிப்பும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தன் காதல் சொட்டும் வரிகளால், விஜய் டிவி விருதுகள் பெற்ற காதலி நயன்தாராவை வாழ்த்தி வருகிறார் விக்னேஷ் சிவன்.
'என்னுடையே விருது, வாங்கிய விருதுகள், நான் என்னைக்கு இந்த புள்ள கையில என் விருத கொடுக்க போறேனோ தெரியலையே' என ஃபுல் ஃபார்மில் தன் காதல் அம்புகளை எய்து வரும் விக்னேஷ் சிவன், இன்றே திருமண அறிவிப்பை வெளியிட்டாலும் ஆச்சர்ய படுவதற்கில்லை.