Breaking News

விஜயின் 'சுறா' படம் தான் என் பேவரைட் - வாய்கொடுத்து வாங்கி கட்டிய சுனிதா


சில நாட்களுக்கு முன், குடித்து விட்டு கார் ஒட்டியதாக நடன நிகழ்ச்சி பிரபலம் சுனிதா, பொது மக்களிடம் திட்டு வாங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. அதனை தொடர்ந்து 'தான் குடிக்கவில்லை என்றும் கார் ஒட்டியது தன் ஓட்டுனர்தான்' என்றும் கிளம்பிய சர்ச்சைக்கு பதில் அளித்து இருந்தார்.

இப்படி இருக்கையில் மீண்டுமொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் அவர். தமிழ் சினிமாவின் டாப் நட்சத்திரம், நடிகர் விஜயின் சினிமா வாழ்க்கையிலேயே மிகப் பெரிய பிளாப் திரைப்படம் என்றால் அது சுறா.

இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்த சுனிதா, 'தனக்கு தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் என்றால், அது விஜய்' எனவும் 'அவருக்காக உயிரையும் கொடுக்குமளவுக்கு தீவிர ரசிகை நான்' என்றும் தெரிவித்திருந்தார்.


மேலும் அவர் விஜயின் திரைப்படங்களில் முதன் முதலில் பார்த்தது 'சுறா' என்றும், விஜயின் படங்களிலேயே அதிகம் பிடித்ததும் அதுதான் எனவும் தெரிவித்திருந்தார் சுனிதா.

'இதனை வெளியே கூறினால் பலர் தன்னை திட்டுவதாகவும், அது ஏன் என்று புரியவில்லை' எனவும் விபரீதம் புரியாமல் பேசி இருந்தார். இவரது இந்த பேட்டியானது விஜயின் பிளாப் திரைபடத்தை காலாய்ப்பது போல இருந்ததாக கோபமடைந்த விஜயின் ரசிகர்கள் பலர், சுனிதாவை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.