Sunday, 3 June 2018

நடிகை திரிஷாவை 'பேய்' என திட்டிய சீயான் விக்ரம்

saamy-square-trailer

இயக்குனர் ஹரி, சீயான் விக்ரம் கூட்டணியில் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி மெகா வசூல் செய்த திரைப்படம் சாமி. இதனுடைய இரண்டாம் பாகம் தற்பொழுது 15 வருடங்கள் கழித்து 'சாமி ஸ்கொயர்' எனும் பெயரில் வெளியாக இருக்கிறது.

புதியதாக கீர்த்தி சுரேஷ், பிரபு, பாபி சிம்ஹா என பல பிரபலங்கள் இணைந்திருக்கும் இப்படத்தின் ட்ரைலர் சென்றவாரமே வெளியாக இருந்தது.
ஆனால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதத்தில், ரிலீசானது தள்ளி வைக்கப்பட்டது.

saamy-square-trailer

இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு 'சாமி ஸ்கொயர்' ட்ரைலர் வெளியாகி இருக்கிறது. முதல் பாகத்தில் 'நான் போலீஸ் இல்ல பொருக்கி' என்ற வசனத்தை விக்ரம் பேசி இருந்ததை போல, இரண்டாம் பாகத்தில் 'நான் சாமி இல்ல பூதம்' என்கிற வசனத்தை பேசும் காட்சிகள் அந்த ட்ரைலரில் இடம்பிடித்துள்ளது.

மேலும் இதில் ஆறு சாமி விக்ரமின் மகன் தான், இப்படத்தின் ஹீரோ விக்ரம் எனும் நிலையில், 'நான் தாய் வயித்தில் பிறக்கல, பேய் வயித்தில பிறந்தேன்' என பொசுக்கென்று நடிகை திரிஷாவை பேய் என்று குறிப்பிடும் காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது.

'மாஸ்ஸாக இருக்க வசனத்தை வைத்திருப்பார்கள்' என்றே எடுத்துக்கொண்டாலும், 'தாயை பேய் என்று குறிப்பிடுவது எல்லாம் ரொம்பவே ஓவர்' என்கின்றனர் ஒரு சில ரசிகர்கள்.

ஒருவேளை, தாய் வேடம் என்பதினால், நடிகை திரிஷா இப்படத்தில் நடிக்க மறுத்துவிட்ட கோபத்தில், இயக்குனர் அப்படியொரு வசனத்தை வைத்திருக்கிறாரோ என்னமோ..!
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();