Sunday, 3 June 2018

விக்ரமை வச்சி செஞ்ச 'சாமி ஸ்கொயர்' வசனங்கள்...! படத்தின் ரிசல்டை ட்ரைலரை பார்த்தே சொன்ன ரசிகர்கள்

saamy-2-trailer

விக்ரம், த்ரிஷா நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியாகி சக்கை போடுபோட்ட திரைப்படம் சாமி. இதனை பிரபல இயக்குனர் ஹரி இயக்கி இருந்த நிலையில், பட்டி தொட்டி எங்கும் மாபெரும் வெற்றிப் படமாக, வெற்றிநடை போட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் சாமி ஸ்கொயர் எனும் பெயரில் உருவாகி இருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தில் விக்ரம் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் திரிஷா, கீர்த்தி சுரேஸ் என இப்படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கின்றனர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அம்மா வேடம் என்பதனால் திரிஷா நடிக்க மறுத்து வெளியேறி விட்டார்.

இந்த பிரச்சனைகளை எல்லாம் தாண்டி, இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி இருந்த நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் ஆடிப் போய் இருக்கிறது படக்குழு.

saamy-2-trailer


குறிப்பாக நடிகர் விக்ரம் பேசி இருந்த 'நான் தாய் வயித்துல பிறக்கல, பேய் வயித்துல பிறந்தேன்', 'நான் சாமி இல்ல பூதம்' ஆகிய வசனங்கள் மகா மட்டமாக இருப்பதாகவும், 'மிகவும் திறமை வாய்ந்த நடிகரான விக்ரம், ஏன் இந்த மாதிரியான படங்களில் எல்லாம் நடிக்க ஒப்புக் கொள்கிறார்' எனவும் டிரைலரை பார்த்தே, 'படம் எதிர்பார்த்த படி இருக்காது' என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் ரசிகர்கள்.



    
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();