Saturday, 2 June 2018

நடிகைகளை போலவே நிர்வாண போஸ் கொடுத்த பிரபல நடிகர்


தொழில்நுட்ப வளர்ச்சியுடன், நாகரிகமும் வளர்ந்து வரும் நிலையில் மேலை நாட்டு கலாச்சாரமானது இந்தியாவில் அடியெடுத்து வைக்க ஆரம்பிதுள்ளது. பெரும்பாலான படித்த வட இந்தியர்கள், மேலை நாட்டினராகவே மாறிவிட்ட நிலையில், சினிமா நாயகிகளும் அவர்களுக்கு ஏற்றார்போல கவர்ச்சியில் இருந்து படு கவர்ச்சிக்கு மாறியுள்ளனர்.   

முன்பெல்லாம் இடுப்பை காட்டவே பயந்த நாயகிகள், இன்று சர்வ சாதாரணமாக நிர்வாணமாக நடிக்கிறார்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் பிரபல பாலிவுட் நடிகரும், ஒட்டுமொத்த இந்திய நாயகிகளின் கனவுக் கண்ணனுமான ரன்வீர் கபூர், அவரது சஞ்சு எனும் திரைப்படத்தில் நிர்வாணமாக நடித்திருப்பது, அப்படத்தின் ட்ரைலரின் மூலம் தெரியவந்துள்ளது.


பிரபல பாலிவுட் நடிகரும், தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தாக கைது செய்யப்பட்டவருமான, 'சஞ்சய் தத்தின்' வாழ்க்கை வரலாற்று திரைப்படம்தான் சஞ்சு. இதனை  PK திரைப்பட இயக்குனரான ராஜ்குமார் ஹிரானி இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் ரன்வீர் கபூரை போலவே, PKவில் நாயகன் ஆமீர்கான் நிர்வாணமாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 
Disqus Comments
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();