Breaking News

'ஆத்தாடி என்ன உடம்பி' பாடல் இப்படிதான் உருவானது - ரகசியத்தை சொன்ன ராமர்



பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று உலக தமிழர்களிடையே பிரபலமானவர் ராமர். இவரது காமெடி ஃபெர்பார்மன்ஸ்களில் பாட்டு, டான்ஸ் என இவர் செய்யும் ஒவ்வொரு விசயமும் தற்பொழுது டிரென்ட் ஆகி வருகிறது. இந்நிலையில், சென்ற வருடம் இவர் 'ஆத்தாடி என்ன உடம்பு' எனும் பாடலை,அவர் பாணியில் பாடியது தற்பொழுது அதிக அளவில் பகிர பட்டு வருகிறது.


தற்பொழுது இப்பாடல் வைரலானது குறித்து பேசி இருந்த ராமர், 'என்னம்மா இப்படி பண்றீங்களேமா' வசனத்திற்கு பிறகு, அதிக மக்கள் என்னை பாராட்டுவது இந்த 'ஆத்தாடி என்ன உடம்பி' பெர்ஃபார்மன்ஸிற்காக தான்.

அந்த எபிசோடில் நடிப்பதற்கு, நான் சிறு வயதில் பார்த்த கரகாட்ட நிகழ்ச்சிள் மிகுந்த உறுதுணையாக இருந்தது. பாடுவது ஆடுவது என கரகாட்ட கலைஞர்களின் ஒவ்வொரு செய்கையையும் கவனித்து வைத்ததை எல்லாம் அதில் உபயோகப் படுத்தி இருந்தேன்.


'ஆத்தாடி என்ன உடம்பு' என்ற அந்த ஒரிஜினல் பாடலை, நகைச்சுவைக்காக  'ஆத்தாடி என்ன உடம்பீ' என மாற்றி இருந்தேன் அது மக்களை கவர்ந்திருந்தது மிக்க மகிழ்ச்சி' என அப்பாடல் உருவான விதம் குறித்து தெரிவித்திருந்தார்.